Friday, October 9, 2009

அன்பே!?.....

முகம் பார்த்ததும்
அகம் தொலையும் என்பதில் எல்லாம்
எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை!....
அன்று உன்னைப் பார்க்கும் வரை!

முழு வெள்ளையில்
கையில் ஒற்றை ரோஜாவுடன்
துரத்தில் வந்த என்னை
அடையாளம் கண்டு சிரித்தாயே….
அப்போது தான் என் மனது
லேசாய் ஆட்டம் கண்டது!

அருகில் வந்ததும்
ரோஜாவை நீட்டிய படி
லேசாய் குனிந்து
“நான் உன்னை நேசிக்கிறேன் கண்மணி!”
என்ற போதோ முழுதாய் விழுந்து விட்டது!

அதற்கு முன்பும்
எத்தனையோ முறை
பார்த்துக் கொண்டிருக்கிறோம்!
சண்டை கூடப் போட்டதுண்டு!
அப்போதெல்லாம் நானாய் இருந்த நான்
நீ நேசிப்பதாய் சொன்ன நொடியிலிருந்து
வேற்றாளாய்ப் போனேன்!

என்ன தான் “ஒன்றுமே இல்லை!” என்று
தலையைத் திருப்பிக் கொண்டாலும்
உள்ளத்திலிருக்கும் உண்மை
மாறாதல்லவா!

விலகி விலகிப் போனாலும்
என் உள்ளம்
ஓடி ஓடிப் போய்
உன்னைக் கட்டிக் கொள்வதைத்
தடுக்க முடியவில்லை!

சிறிதாய் விழுந்த காதல் வித்து
கப்பும் கிளையும் விட்டு
ஆல மரமாய்
என்னுள் வளர்ந்து நிற்கிறது!

அன்று மறுத்த போது
காத்திருப்பேன் என்று சொல்லிப் போனாயே....
இப்போதும் காத்திருக்கிறாயா
அல்லது
மறந்து விட்டாயா!?....

No comments: