Friday, October 9, 2009

கண்ணாமூச்சி ஆட்டம்!

எத்தனை நாளைக்குத் தான்
இந்த கண்ணாமூச்சி ஆட்டம்!?

நான் வரும் போது
நீ மறைவதும்…
விழிகள் சந்தித்தால்
திரும்பிக் கொள்வதும்…

எது வரை செல்ல உத்தேசம்!?

என் மனம் தெரிந்தும்
ஏனடா நடிக்கிறாய்!?

பார்த்த அன்றிலிருந்து
நெஞ்சில் நீக்கமற நிறைந்து விட்டாய்!
உனக்கும் நான்
அப்படித் தான் என்று தெரிகிறது!…

ஆனாலும்
ஏதோ…
ஏனோ...
ஒரு விலகல்!
எதற்காக!?...

பெண்...
நான் எப்படியடா
உடைத்துச் சொல்வேன்!?...

நீயாய் இதயம் திறப்பதற்கு என்ன!?...
உன் இதழ் அசைத்து
"நேசிக்கிறேன்!" என்றொரு
வார்த்தை உதிர்ப்பதற்கு என்ன!?

நெஞ்சம் நிறைந்திருக்கும் உன்னோடு
தினமும் இப்படிச் சண்டை போடுகிறேன்!...
நேரில் பார்க்கும் போதோ
வார்த்தைகள் தொண்டைக் குழியில்
வழுக்கி விழுகிறது!

No comments: