ஆசைகள் எல்லாமேவெறும் கனவுகள் தான்!.......
எப்போதுமே வெகு இலகுவாய்க்
கலைந்து போய் விடுகிறது!!!!!
வளர்க்கும் போதும், வளரும் போதும்
மிக இதமாய் தான் இருந்தது....
உடைந்து சிதறும் பொது தான் தெரிகிறது,
அது சென்ற ஆழம் எல்லாம்!!!
அதிர்ஷ்டம் அருகில் வராது என்று தெரிந்தே
பெருகும் ஆசைகளை
என்ன செய்வதென்று தெரியவில்லை!
என்னாலான ஒரு சின்ன முயற்சியாய்
கண்களோடு, மனதையும் சேர்த்து
மூடிக் கொள்கிறேன்!
இருந்தும் சில சமயங்களில்
இதயம் விழுந்து விடுகிறதே!.....
என்ன பட்டும் அறிவிற்குப் புரிவதே இல்லை.....
மனதிற்கு இறக்கையைக் கட்டி விட்டு
வாயை மூடிக் கொள்கிறது!
அதனால் மனம் படும்காயங்களும்,
அனுபவிக்கும் அவஸ்தைகளும்
அதற்கெங்கே புரியப் போகிறது!?......
பல நேரங்களில்
விழிநீர் கீழே சிந்தி விடாமல் காப்பதிலேயே
போதும் போதும் என்றாகி விடுகிறது....
இதில் வேதனையை வேறு
மறைக்க வேண்டும் என்றால்
எப்படித் தான் சமாளிப்பது!?....
No comments:
Post a Comment