Friday, October 9, 2009

என் துன்பங்கள்!.......

ஆசைகள் எல்லாம்
மழைத் துளி பட்ட மணல் வீடாய்
உடைந்து போகின்றது!...
தாங்க முடியவில்லையே அன்பே…..

நட்பு முதல்
நான் வளர்த்த காதல் வரை
அனைத்துமே எனது உரிமைகளை
பறிப்பது போல் தோன்றுகிறது….

எங்கு பார்த்தாலும் முட்டுக்கட்டைகள்…..
எங்கு பார்த்தாலும் தடைகற்கள்…..
வாழ்க்கை விடியா இருளுக்குள்
முழ்கிக் கொண்டிருக்கிறது!….

ரொம்ப நாளைக்கு பின்
இன்று தான் கொஞ்சம் சிரித்தேன்…
அந்த சின்ன சந்தோசம் கூட
கடவுளுக்கு பொறுக்கவில்லையா!?.......

நான் செய்தது தப்பு தான்
மறுக்கவில்லை……
அதற்கு தண்டனை குடு என்று கேட்டதும்
உண்மை தான்…….

ஆனால் எவ்வளவு தான் தாங்குவது!?....
எவ்வளவு தான்
ஒன்றுமே நடவாதது போல் நடிப்பது!?......
எதற்கும் ஒரு எல்லை உண்டு தானே…..

எல்லாம் நல்லதற்கு தான் என்று
எவ்வளவு நாள் தான் பொறுப்பது!?
சிறிது சிறிதாய்
அனைவரும் வேற்றுமையாகிப் போய்
இறுதியில் நான் மட்டும்
தனித்து விடப் படும் போதாவது
இந்தத் துன்பங்கள் தீருமா!?.......

No comments: